108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலையை நடைமுறைப்படுத்த வேண்டுகோள்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலையை நடைமுறைப்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலையை நடைமுறைப்படுத்த வேண்டுகோள்
Published on

பெரம்பலூரில், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை சுப்ரமணியன் தாக்கல் செய்தார். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் நடைமுறைப்படுத்திட வேண்டும். சங்கம் எழுப்பியுள்ள 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர ஊதிய உயர்வு மீது தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்திட ஆம்புலன்ஸ் நிவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோத போக்கினை ஆம்புலன்ஸ் நிவாகம் கைவிட செய்வதற்கு அரசு அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் நிர்வாகத்தால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலையான பணியிடம் வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான 17-10-2014 தேதியிட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாத பெரம்பலூர் மாவட்ட மண்டல அதிகாரிகள் மீதும், சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பாரபட்ச நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்ட மண்டல அதிகாரிகள் மற்றும் மனித வளத்துறை அதிகாரி மீதும் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com