சென்னை மெட்ரோ ரெயிலில் அக்டோபர் மாதத்தில் 1.08 கோடி பேர் பயணம்

அதிகபட்சமாக 16.10.2026 அன்று 4,51,705 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ
Published on: 

சென்னை,

அக்டோபர் மாதத்தில் 1.08 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1,08,23,408 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 16.10.2026 அன்று 4,51,705 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் 10,240,136 பயணிகளும், 14.64 கி.மீ நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனி மெட்ரோ நிலையம் வரை செல்லும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் 5,83,272 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பயணம்

2026, அக்டோபர் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,05,718 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி (Single Journey Paper QR 22,52,397; ONDC – 13,95,128; Whatsapp - 4,74,602; Chennai One App – 4,26,780; Paytm 3,35,336; PhonePe – 1,76,364; Static QR 2,20,624; Online QR – 2,02,664; CMRL Mobile App (SVP) 1,33,795) பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.

மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X