புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன.
புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மூன்றாம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை தமிழகத்திற்கு 1 கோடியே 57 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் இலவச தொகுப்பில், புனேவில் இருந்து 9 பெட்டிகளில் 1 லட்சத்து 8 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன.

இந்த தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள மாநில சுகாதாரத்துறை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கும் இந்த தடுப்பூசிகள் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com