

108 மருத்துவ உதவியாளர் பணிக்கான தேர்வு, பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. பி.எஸ்சி. நர்சிங், டி.எம்.எல்.டி, டி.என்.ஏ. படிப்பு, 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,435 ஆகும்.
எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகமாகும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். (பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்) மேலும் விவரம் அறிய விரும்புவோர் 044-28888060, 75, 77 ஆகிய தொலைபேசி எண்களில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை 108 சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.