10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

3,936 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த பொதுத்தேர்வினை 9.55 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதவுள்ளனர்.

பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com