10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 3 மாணவிகள் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை

சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.
சென்னை,
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் மதிப்பெண்களை குவித்து உள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு 499 பெற்று மாநில அளவில் சாதனை படைத்து இருக்கிறார்கள். 3 மாணவிகளும் தனியார் பள்ளியில் படித்தவர்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, உடுமலைப் பேட்டை மாணவி திவ்யா லட்சுமி மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள புலவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாணவி சோபியா ஆகிய 3 பேரும் 499 மதிப்பெண் பெற்று உள்ளனர்.
மூவரும் 4 பாடங்களில் 100-க்கு 100 வாங்கி உள்ளனர். ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 99 மார்க் எடுத்தனர். மாணவி சோபியாவின் தந்தை வெங்கடேசன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story