தேர்வில் தோல்வி பயத்தில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை கொரட்டூரில் தேர்வில் தோல்வி பயத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் தோல்வி பயத்தில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
Published on

சென்னை கொரட்டூர் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார். இவருடைய மனைவி திலகவதி. இவர்களுக்கு சவேதா (17), சவித்ரா (15) என 2 மகள்களும், ஜஸ்வந்தன் (14) என்ற மகனும் உள்ளனர். இதில் சவித்ரா, தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார். தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்தநிலையில் தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் இருந்து வந்த சவித்ரா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com