இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனா

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனா
Published on

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, நாகையை சேர்ந்த மீனவர்கள் சிவகுமார், லோகேஷ்வரன், பாரதிதாசன், கலையரசன், ரவிசந்திரன், பிரபு உள்பட 11 பேர் கடந்த மாதம் 22-ந்தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படை போலீசார், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் கைது செய்தனா. படகுகளுடன் அனைவரையும் இலங்கைக்கு கொண்டு சென்று கோர்ட்டில் ஆஜாபடுத்தி சிறையில் அடைத்தனா.

கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து தமிழக மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து 11 மீனவாகளுக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த மீனவர்களை பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி சால்வை அணிவித்தும், உணவு பொருட்கள் கொடுத்தும் வரவேற்றார்.

பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவாகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com