நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது


நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2026 3:34 PM IST (Updated: 1 Jan 2026 5:11 PM IST)
t-max-icont-min-icon

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாழையூத்து அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தாழையூத்தை சேர்ந்த அந்தோணி எட்வின் ஜான்சன் (வயது 22) என்பவரை சோதனை செய்த போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 1 கிலோ 140 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேன்றி அமலாதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அந்தோணி எட்வின் ஜான்சனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 140 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

1 More update

Next Story