பாளையங்கோட்டையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை, வாய்க்கால் பாலம் அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 23), சுடலையாண்டி(24) மற்றும் சிறார் ஒருவர் ஆகியோரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, பாளையம்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com