தூத்துக்குடியில் 1.1 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், பணம் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
4 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 20), அழகேசபுரத்தை சேர்ந்த ராஜேஷ்(20), SS மாணிக்கபுரத்தை சேர்ந்த அருண்குமார்(22) மற்றும் திருநெல்வேலி சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த மாயகணபதி(24) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

கஞ்சா, பைக்குகள், பணம் பறிமுதல்:

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com