நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி விலக்கு அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நத்தோடு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கஞ்சா பறிமுதல்
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி விலக்கு அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நத்தோடு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த, நெல்லை டவுண் பகுதியை சேர்ந்த சங்கர்ராஜா (வயது 24) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சங்கர்ராஜாவை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com