

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழபுரம்-சிவஞானபுரம் சாலை விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களான நம்பிராஜ் (வயது 28), ஜெகதீஷ்(35) ஆகியோர் என்பதும், அவர்கள் வந்த பைக்கில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்சொன்ன போலீசார் நம்பிராஜ், ஜெகதீஷை கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.