ஆவின் மூலம் கடந்த ஆட்சியை விட கூடுதலாக 11 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் - அமைச்சர் ராஜகண்ணப்பன்


ஆவின் மூலம் கடந்த ஆட்சியை விட கூடுதலாக 11 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
x
தினத்தந்தி 19 March 2025 11:01 AM IST (Updated: 19 March 2025 11:03 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் மூலம் 11 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, அணைக்கட்டு தொகுதியில் பால் குளிரூட்டும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நந்தகுமார் எம்.எல்.ஏ. எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், "பால் விற்பனையில் 16 ரூபாய் குறைவாக வழங்கி வருகிறோம். தனியார் பால் 56 ரூபாய்க்கும், ஆவின் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தை நட்டம் இல்லாமல் நடத்த வேண்டும்.

கடந்த ஆட்சியில் இருப்பதை போன்று பால் தட்டுப்பாடு இருக்கவில்லை. பால் விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட தற்போது 11 லட்சம் லிட்டர் கூடுதலாக ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story