11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

திருவிடைமருதூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை

ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, குறிப்பாக மாணவிகளுக்கு உயர்கல்வியில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக உயர்கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம், ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் இந்த 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கல்லூரிகள் தலா 5 பாடப்பிரிவுகளுடன் தற்காலிக கட்டிடங்களில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் கூடுதலாக கிராமப்புறத்தில் பின்தங்கிய 3,050 மாணவ, மாணவிகள் பயனடைவர்.

1 More update

Next Story