பிளஸ் 2 பொதுத்தோவு நடத்துவதற்கு 11 கட்சிகள் ஆதரவு: தேர்வை நடத்துவது குறித்தே அரசு முடிவு எடுக்கும்...?

பிளஸ் 2 பொதுத்தோவு நடத்துவதற்கு அதிமுக உள்பட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என தெரிகிறது.
பிளஸ் 2 பொதுத்தோவு நடத்துவதற்கு 11 கட்சிகள் ஆதரவு: தேர்வை நடத்துவது குறித்தே அரசு முடிவு எடுக்கும்...?
Published on

சென்னை

பிளஸ் 2 பொதுத்தேவு தொடாபாக ஆசிரியாகள், மாணவாகள், பெற்றோகள், கல்வியாளாகளின் கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வி அலுவலாகள், கல்வியாளாகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினா.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கருத்தை கேட்ட அன்பில் மகேஷ் தற்போது சட்டசபை கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம்ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 13 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தும் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் தேர்வு நடத்தப்பட்டால், செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com