காஞ்சீபுரத்தில் பூங்காவில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 11-ம் வகுப்பு மாணவருக்கு வலைவீச்சு

காஞ்சீபுரத்தில் பூங்காவில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 11-ம் வகுப்பு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் பூங்காவில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 11-ம் வகுப்பு மாணவருக்கு வலைவீச்சு
Published on

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. நேற்று முன்தினம் இவரது தாயார் டி.என்.பி.எஸ்சி. தேர்வுக்காக வீட்டில் படித்து கொண்டிருந்தார். சிறுமியின் தந்தை மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் சிறுமியை அழைத்துகொண்டு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். பூங்காவில் சிறுமி விளையாடி கொண்டிருந்தபோது அவரது தந்தை அங்கேயே தூங்கி விட்டார். அப்போது அங்கு இருந்த மர்மநபர் ஒருவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச்சென்று விட்டார்.

சிறுமிக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com