குமாரபாளையத்தில் 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது

குமாரபாளையத்தில் ஆம்னிவேனில் கடத்தி வரப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசியை குற்றபுலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையத்தில் 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது
Published on

நாமக்கல்: 

நாமக்கல் மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் குமாரபாளையம் அக்ரஹாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னிவேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது அந்த வாகனத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து 1,100 கிலோ ரேஷன் அரிசியையும், ஆம்னிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ரேஷன்அரிசியை கடத்தி வந்த ஈரோடு மாவட்டம் குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் தாமோதரன் (வயது32) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தாமோதரனை பேலீசார் நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

ரேஷன்அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com