சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.14 லட்சம் பேர் பயணம் - போக்குவரத்துத்துறை தகவல்

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.14 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.14 லட்சம் பேர் பயணம் - போக்குவரத்துத்துறை தகவல்
Published on

சென்னை,

பொங்கல் பண்டிகயை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகவும், விடுமுறைக்குப் பிறகு ஊர் திரும்புவதற்காகவும் தமிழக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என ஜனவரி 11(நேற்று) முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்தது. அதன்படி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 2,763 சிறப்பு பேருந்துகளில் 1,14,665 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம், ஊரடங்கு, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் என பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com