தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவரது திருவுருவபடத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மரியாதை
Published on

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பட்டி தொட்டி எல்லாம் தமிழை பரப்பியவர் சி.பா.ஆதித்தனார். நான் தங்கு தடையின்றி தமிழ் படிக்க தினத்தந்தியே காரணம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com