திருநெல்வேலியில் 11.7 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் 11.7 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரதசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது களக்காடு பெருமாள் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிங்கிகுளத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனை களக்காடு காவல் நிலையம் அழைத்து சென்றார்.

இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிகண்டனை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான பேலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வள்ளியூர் ரயில்வே குடோன் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கூடங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 10 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், மணிகண்டனை வள்ளியூர் காவல் நிலையம் அழைத்து சென்றார்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிகண்டனை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 10 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com