11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

மாணவியை திருமணம் செய்தவரை போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த காவேரிபுரம் கணவாய் காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 25). இவருடைய சகோதரர் விருதுநகர் மாவட்டம் திருவல்லிபுத்தூரை சேர்ந்த பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இதில் ஏற்பட்ட பழக்கத்தில் அந்த பெண்ணின் சகோதரியான 17 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவியை ராஜா காதலித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவியை அவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த மாணவி கர்ப்பிணியாக உள்ளார்.

அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது மாணவிக்கு 17 வயது என்பதை அறிந்த மேட்டூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மேட்டூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி மாணவியை திருமணம் செய்த ராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com