செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
Published on

சென்னை,

தமிழகத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள்- 1,369, நகராட்சி வார்டு உறுப்பினர்கள்- 3 ஆயிரத்து 824, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள்- 7 ஆயிரத்து 411 என மொத்தம் 12 ஆயிரத்து 604 பதவி இடங்களை நிரப்புவதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள், ஆலோசனைகள் பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். தேர்தலுக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து வேட்பாளர்களும் இடைவிடாத பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது.

இந்நிலையில் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவிலிருந்து 12 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட புகாரில் செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com