தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
Published on

சென்னை,

தமிழகத்தில் பணியாற்றி வரும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், ரெயில்வே ஐஜி சுமீத் சரண், ஊர்க்காவல்படை ஐஜியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி தினகரன், சிலை தடுப்பு பிரிவு ஐஜியாகவும், திருச்சி ஆயுதப்படை டிஐஜி கயல்விழி, சென்னை போலீஸ் பயிற்சி டிஐஜியாகவும், திருவாரூர் எஸ்பி சீனிவாசன், திண்டுக்கல் எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த ரவளி பிரியா தஞ்சாவூர் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி விஜயகுமார், திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும், தஞ்சாவூர் எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய், ராணிப்பேட்டை எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சைபர் கிரைம் எஸ்பியாகவும், அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாகவும், சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு பிரிவு எஸ்பி தேவராணி, சைபர் கிரைம் எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த அருண் பாலகோபாலன், மவுண்ட் துணை கமிஷனராகவும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்பி சியாமளா தேவி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com