துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

இலங்கை கடற்படையின் இந்த அடாவடி நடவடிக்கை மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
Published on

ராமேஸ்வரம்,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை  எல்லை தாண்டி அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளது. கோடியகரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை செய்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அடாவடி நடவடிக்கை மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com