தூத்துக்குடியில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெப்பக்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்தனர்.

போலீசார் ரோந்து பணி

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெப்பக்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

1.2 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது

இதையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, நேதாஜி நகரைச் சேர்ந்தவர்களான சொர்ணபாண்டி மகன் சோலைக்குமார் (வயது 32) மற்றும் ராஜசிங் மகன் ஜெர்ரிஸ்(33) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com