ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 66 விவசாயிகள் 397 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர்.

வரத்து குறைந்தது

இதில் 150 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 73.10 ரூபாய் முதல் 77 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. 247 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 46.69 ரூபாய் முதல் 69.63 ரூபாய் ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட 21 மூட்டைகள் வரத்து குறைந்துள்ளது. கிலோவிற்கு 1.69 காசுகள் விலை குறைந்துள்ளது.

நேற்று நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் மொத்தம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com