கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள்

கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள்
Published on

திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரிவேராநகர் குடியிருப்பு பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கே.கே.நகர் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, 12 நவீன கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். மேலும், குடியிருப்பு பகுதி மக்களிடையே குற்ற விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமரா பயன்பாடு குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், குடியிருப்பு பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com