விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டில் ஆய்வு செய்த பின்னர் பேட்டியளித்த அவர் கூறும்போது, "விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 6 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 பேரும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com