பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது
Published on

ஆதனக்கோட்டை அருகே மங்களத்துப்பட்டி பெரிய கண்மாய் வடக்கு கரையில் பணம் வைத்து சூதாடுவதாக ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியை சேர்ந்த முஜிப்ரகுமான் (வயது 52), மங்களத்துப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (53), கஜேந்திரன் (36), செல்வராஜ் மகன் சுரேஷ் (37), அண்டகுளத்தை கனகராஜ் (48), பகட்டுவான்பட்டியை சேர்ந்த தங்கப்பா (50), மனவிடுதியை சேர்ந்த மங்கப்பன் மகன் மாரிமுத்து (29), ஒடுகம்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் (45), காட்டுப்பட்டியை சேர்ந்த கோபால் மகன் ரமேஷ் (37), கிள்ளனூரை சேர்ந்த செல்வம் (40), மனவிடுதியை சேர்ந்த முருகேசன் (40), குன்றண்டார்கோவிலை சேர்ந்த ரத்தினஜோதி மகன் கருப்பையா (32) ஆகிய 12 பரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.9,980 பறிமுதல் செய்யப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com