தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 256 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 256 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், சென்னை மாவட்டத்தில் 8 பேருக்கும், கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் என 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com