தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் 'அபேஸ்'; போலீசார் மீட்டனர்

பட்டிவீரன்பட்டியில் தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து ‘அபேஸ்’ செய்த ரூ.12 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் 'அபேஸ்'; போலீசார் மீட்டனர்
Published on

பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் பாண்டிவேல் (வயது 52). தொழிலாளி. இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று, ஒரு இணையதள இணைப்பு முகவரி (லிங்க்) குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பாண்டிவேல் கிளிக் செய்தார். அடுத்த ஒருசில வினாடிகளில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் அறிந்தார். இதுகுறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. மேலும் பாண்டிவேலின் வங்கி கணக்கில் இருந்து அபேஸ் செய்யப்பட்ட பணத்தை மீட்டனர். இதையடுத்து அந்த பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பாண்டிவேலிடம் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com