வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிக்காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆண்டு பராமரிப்புக்காக 2-வது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,200 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com