வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவட்டும் இரண்டாவது யூனிட் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முதல் யூனிட்டில் இரண்டாவது மூன்றாவது அலகில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக வடசென்னை அனல் நிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com