12,176 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

விழுப்புரத்தில் 12,176 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
12,176 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
Published on

விழுப்புரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, .சிவக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு 12,176 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் 5 வகையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினர்.

இதில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயசந்திரன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் .தமிழ்செல்வி, கோட்டாச்சியர் ரவிசந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், ஒன்றியக்குழுத்தலைவர்கள் கலைசெல்வி, சச்சிதாநந்தம், சங்கீதா அரசி, துணை இயக்குனர் பொற்கொடி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, விழுப்புரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மனோசித்ரா, ஜெகதீஸ்வரி, கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com