திமுக வேட்பாளர் வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை

கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திமுக வேட்பாளர் வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் துணிகர கொள்ளை நடந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுமார் 122 பவுன் நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளரின் வீட்டில் போலீஸ் மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு ஓடியது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த வீட்டை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஸ்ரீநாதா பார்வையிட்டும், விசாரணை நடத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com