124-வது பிறந்தநாள்: பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.
124-வது பிறந்தநாள்: பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை
Published on

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காமராஜர் திருவுருவச் சிலை மற்றும் உருவப் படத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com