பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய 2 பேருக்கு 125 நாள் சிறை தண்டனை - துணை கமிஷனர் உத்தரவு

பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய 2 பேருக்கு 125 நாள் சிறையில் அடைக்க கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் உத்தரவிட்டார்.
பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய 2 பேருக்கு 125 நாள் சிறை தண்டனை - துணை கமிஷனர் உத்தரவு
Published on

சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் அப்பு (வயது 34) மற்றும் இம்மானுவேல் (21). இவர்கள் இருவர் மீதும் ஐ.சி.எப். போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் துணை கமிஷனர் முன்னிலையில் ஆஜராகி, அடுத்த ஒரு வருடத்துக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டோம் என பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி வாலிபர் ஒருவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரையும் ஐ.சி.எப். போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதையடுத்து பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட அப்பு, இம்மானுவேல் ஆகிய 2 பேரையும் 125 நாட்கள் சிறையில் அடைக்க கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com