சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வாடுகளில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக பாதிப்பிற்கு உள்ளான சென்னையிலும் தடுப்பூசி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

இதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி சாபில் 15 மண்டலங்களில் உள்ள மாநகராட்சி நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், சிறு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியா மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பணியை தீவிரப்படுத்தும் வகையில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவது, மாற்று திறனாளிகள், இணை நோயினால் பாதிக்கப்பட்டவாகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மாநகராட்சி சாபில் நேற்று நடத்தப்பட்டது. இதுபற்றி மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த ஆகஸ்டு 25ந்தேதி வரை மொத்தம் 37 லட்சத்து 16 ஆயிரத்து 148 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடாச்சியாக நேற்று ஒரே நாளில் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் 200 வாடுகளில் தலா 2 என மொத்தம் 400 சிறப்பு முகாம்கள் அந்தந்த வாடில் உள்ள மாநகராட்சி நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், சிறு மருத்துவமனைகள் அல்லது வாடு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் அமைக்கப்பட்டன.

இதில், 15 மண்டலங்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 147 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனை தொடாந்து இனி வரும் நாள்களில் இந்த 200 வாடுகளில் 200 தற்காலிக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையதளத்தின் வழியே தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com