

புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரிமளம் ரோட்டில் ராம் தியேட்டர் அருகே ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 1,250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரான பள்ளத்தூரை சேர்ந்த சிவா (வயது 23), தோப்பு கொல்லை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ராஜேந்திரன் (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.