மழையால் 1.27 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு... அமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில், தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
மழையால் 1.27 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு... அமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
Published on

நாகப்பட்டிணம்,

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், ஆலத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில், தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, வயலில் சாய்ந்து கிடந்த நெற்கதிர்களை எடுத்து வந்த விவசாயிகள், நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கி விட்டதாக வேதனை தெரிவித்தனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தெடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த நல்லாடை கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், உளுந்து, பயிறு பயிரிடப்பட்டுள்ள வயல்களை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.

தரங்கம்பாடி பகுதியில் 3 ஆயிரத்து 405 ஹெக்டேர் பரப்பளவில் நெல்லும், 3 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து, பயறு வகைகளும் மழைநீரால் சேதம் அடைந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com