நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வில் 94.70 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வில் 94.70 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வில் 94.70 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வில் 94.70 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி

தமிழத்தில் நேற்று காலை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையொட்டி நாமக்கல்லில் கலெக்டர் ஸ்ரேயா சிங் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் அவர்கள் படித்த பள்ளிகளில் திரண்டனர். அவர்கள் பள்ளி நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்ட தேர்வு முடிவு தாள்களை பார்த்தனர். அப்போது தேர்ச்சி பெற்ற உற்சாகத்தில் மாணவ, மாணவிகள் துள்ளிகுதித்தனர்.

இந்தாண்டு நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 200 பள்ளிகளில் இருந்து 9 ஆயிரத்து 392 மாணவர்கள், 9 ஆயிரத்து 705 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 97 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.

இதில் 8 ஆயிரத்து 725 மாணவர்கள், 9 ஆயிரத்து 359 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 84 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.70 ஆகும். இதில் மாணவர்களை விட மாணவிகள் 3.53 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள்

அதேபோல் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 239 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதினர். அதில் 8 ஆயிரத்து 380 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 90.70 ஆகும். மேலும் ஆதிதிராவிட நல பள்ளி மாணவர்கள் 96.47 சதவீதமும், பழங்குடியினர் நல பள்ளி மாணவர்கள் 84.73 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

16-வது இடம்

இதனிடையே மாவட்டத்தில் 8 அரசு பள்ளிகள் உள்பட 72 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாநில அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டம் 16-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com