11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் நீதிபதி வீட்டில் ஆஜர்

11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைதான 18 பேர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். #Chennai
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் நீதிபதி வீட்டில் ஆஜர்
Published on

சென்னை,

சென்னையில் அயனாவத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 12 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் குற்றம் சுமத்தப்பட்ட 18 பேரும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com