தஞ்சை பெரியகோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல்போய் உள்ளது!

தஞ்சை பெரியகோயிலில் ரூ. 100 கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல் போய் உள்ளது என எஸ்பி செந்தில்குமார் தெரிவித்து உள்ளார். #BrihadeeswararTemple
தஞ்சை பெரியகோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல்போய் உள்ளது!
Published on

தஞ்சை,

ராஜராஜ சோழன், பட்டத்து அரசியான லோகமாதேவியின் சிலைகள் மாயமானது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ராஜராஜன், லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

சிலைகள் இப்போது அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்கு சொந்தமான காலிக்கோ மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

மியூசியத்தில் ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயிலில் காணாமல் போனதாக கூறப்பட்ட ராஜராஜ சோழன் சிலை குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. சிலைகள் காணமல் போனது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்போது சிலைகள் காணாமல் போனது உறுதிசெய்யப்பட்டு உள்ளது. சிலை மாயம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஐஜி பொன்.மாணிக்கவேல், பெரியக்கோயில் சிலைகள் மாயமானது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தஞ்சை பெரியகோயிலில் காணாமல்போன ராஜராஜ சோழன் சிலை, லோகம்மாள் சிலை விரைவில் மீட்கப்படும் என ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார்.

தஞ்சை பெரியகோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல்போய் உள்ளன என எஸ்பி செந்தில்குமார் குறிப்பிட்டார்.

ராஜராஜ சோழன் சிலை மற்றும் மனைவி லோகமாதேவி சிலை திருடப்பட்டுள்ளது. சிலைகள் குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளது. அருங்காட்சியத்தில் உள்ள சிலைகளை விரைவில் மீட்போம். தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சிலை உட்பட 13 சிலைகள் மாயமாகி உள்ளது. காணாமல் போன சிலைகள் குறித்து விரைவில் குஜராத் சென்று விசாரணை நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com