நெல்லையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லை டவுண், குருநாதன் கோவில் விலக்கு அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.
நெல்லையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் டவுண், குருநாதன் கோவில் விலக்கு அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், காருகுறிச்சியை சேர்ந்த முத்துமாரி மகன் பேச்சிகுட்டி(எ) ராம் (வயது 20) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1.3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, பேச்சிகுட்டியை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com