கஞ்சா, லாட்டரி, குட்கா விற்ற 13 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, குட்கா விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா, லாட்டரி, குட்கா விற்ற 13 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா விற்ற 10 பேரை கைது செய்த போலீசார் ரூ.5,500 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் காவேரிப்பட்டணம், சிங்காரப்பேட்டையில் குட்கா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். அதேபோல் ஊத்தங்கரையில் லாட்டரி சீட்டுகள் விற்ற ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com