13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை
Published on: 

சென்னை,

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது

சென்னை எண்ணூரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரை பீட்டர் ( வயது 22) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் பீட்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இன்று நடந்தது.

இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பீட்டருக்கு 25 ஆண்டுகள் சிறை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com