1,300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
1,300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
Published on

கொல்லங்கோடு, 

கொல்லங்கோடு போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீஸ்காரர் சஜி ஆகியோர் நேற்று மாலையில் கண்ணனாகம் சந்திப்பில் வாகன சாதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு மினி டெம்பா வந்தது. போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் படகுகளுக்கு வழங்கப்படும் 1,300 லிட்டர் மானியவிலை மண்எண்ணெய் இருந்தது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்துடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com