

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 132 காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஐ.எம்.இ.ஐ. (IMEI) எண்கள் மூலம் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 132 செல்போன்களை மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீட்கப்பட்ட 132 செல்போன்களை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து அந்த செல்போன்களின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.