கோவையில் 133 கிலோ குட்கா பறிமுதல்

கோவையில் 133 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் 133 கிலோ குட்கா பறிமுதல்
Published on

கோவை,

கோவை மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சந்தேக இடங்களில் சோதனையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கிணத்துக்கடவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அரசம்பாளையம் பிரிவு, காமராஜ் நகரில் உள்ள வீடு ஒன்றில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், வீட்டுக்குள் பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 20 மூட்டைகளில் இருந்த 133 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சொலவம்பாளையத்தை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் சங்கர் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். எங்கிருந்து குட்கா வாங்கப்பட்டது. எந்தெந்த கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையாளர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com